Help required to test the new tamilblog list arrangement
அன்புள்ள வலைப்பதிவரே,
ஏற்கனவே இங்கு குறிப்பிட்டிருந்தபடி, தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலை மேம்படுத்தி, வாசகருக்கு மேலும் புதிதாக வசதிகளை அளிக்கும் முகமாகவும், அதை எளிதாக நிர்வகிக்க ஏதுவாகவும், தேவையான கருவிகளை நான் சோதனை முறையில் கீழ்க்கண்ட முகவரியில் அமைத்திருக்கிறேன். நேரமும் ஆர்வமும் உள்ள நண்பர்களிடம் இதை சோதித்து மேம்படுத்த உதவியை எதிர்பார்க்கிறேன். இந்த முயற்சியில் ஈடுபட நேரமோ/விருப்பமோ இல்லாதவர்கள் மேற்கொண்டு வாசிக்க அவசியமில்லை.
இப்போது அமைக்கப்பட்டுள்ள வசதிகள்:
====================
வாசகரின் பார்வையில்:
====================
1. பட்டியலை வரிசைக்கிரமப் படுத்தாமல் காட்டுதல்: (Random ordered list) ஒரு சில பதிவுகளே முதலில் கண்ணில் படுவதையும், பெயரின் முதல் எழுத்து செய்யும் சூழ்ச்சியால் கடைசி வரிசைக்கு சிலர் தள்ளப்படும் நிலையைத் தவிர்க்கவும் ஒரு முயற்சி.
2. வாசகர் விருப்பப்படி தலைப்பு, வலைப்பதிவர் பெயர், தொடங்கிய தேதி, முதலான பலவகைகளில் வரிசைப்படுத்திக் கொள்ளும் வசதி.
3. இப்படி வரிசைப்படுத்திய பட்டியலின் செய்தியோடைத் தொகுப்பை ஒரு OPML கோப்பாகத் தயாரித்து இறக்கிக் கொள்ளும் வசதி.
========================================
வலைப்பதிவரின் பார்வையில்:

1. புதிய வலைப்பதிவுகள் தொடங்குபவர்கள் அவற்றைப் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்களே தங்கள் தகவல்களை உள்ளிட்டதும் உடனடியாக பட்டியலும், செய்தியோடைத் தொகுப்பும்(OPML) உடனடியாக இதைப் பிரதிபலிக்கும்.
2. உள்ளிட்ட தகவலை முன்பார்வையிடும் வசதி. இதன் மூலம், எழுத்துப்பிழைகள் தவிர்க்ப்படும். முன்பார்வையிடும்போது, வலைப்பதிவு மற்றும் செய்தியோடை ஆகியவற்றின் முகவரிகள் சுட்டிகளாகக் காட்டப்படுவதால், அவற்றை சோதித்து சரிசெய்ய வாய்ப்பு. (http://www.someone.blogpsot.com/ போன்ற இலவச மெய்யுணர்வு சேவைகளிடமிருந்து தப்பிக்கலாம்)

பட்டியல் நிர்வாகியின் பார்வையில்:

1. அவ்வப்போது குப்பைத்தகவல்களைக் களைவது தவிர்த்து, மற்றபடி நேர நெருக்கடியும் அயற்சியும் ஏற்படுத்தாத பணிகள்.
2. அனைவருக்கும் மேம்பட்ட சேவை, திருப்தி.

இந்த சோதனை/மேம்படுத்தல் முயற்சியில் ஆர்வமுள்ள நண்பர்களை
http://www.thamizmanam.com/Tutorial/tb_list.php
என்ற முகவரிக்கு அழைக்கிறேன்.
நீங்கள் செய்யவேண்டியது:
1. இந்தப் பட்டியலை வாசகர் பார்வையில் பார்த்து, எல்லாம் சரியாக இயங்குகிறதா, பல இயங்குதளம்/உலாவி வடிவங்களிலும் சரியாக இருக்கிறதா என்று சோதித்தல்
2. வலைப்பதிவர் பார்வையில் பார்த்து, புதிய தகவலைச் சேர்த்தல் சரியாக இருக்கிறதா என்று சோதித்தல்.
3. குறைகள்/ஆலோசனைகள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுதல்.
இங்கே இன்னும் முடிக்கவேண்டிய இரண்டு பணிகளைச் சொல்லவேண்டும்:
- பக்கத்தை அலங்கரித்தல், பலவகை சுட்டிகள் கொடுத்தல் போன்றவை
- புதிய தகவலை 'வெற்றுத்தரவுகள்' போன்றவற்றிற்காக சோதித்து, பின் சேமித்தல்.
இந்த இரண்டும் கூடிய விரைவில் செய்யப்பட்டு விடும். ஏற்கனவே இருக்கும் தகவலில் மாற்றங்களை, வலைப்பதிவர் தாமாகவே செய்துகொள்ளும் வசதி இன்னும் பலநாள் பிடிக்கும்.
இதில் பிறப்பிடம்/வசிப்பிடம் என்று ஒரு புதிய தகவலை சேர்த்துள்ளேன். அதில் உள்ள இடப்பெயர்கள், நிலப்பகுதியைக் குறிக்கும் (ஒரு நாட்டை அல்ல). புனைவு ஆக்கங்கள் தவிர்த்து, பொதுவான எண்ணப் பகிர்வு, சிந்தனை சேமிப்பு என்று வரும்போது, அவரவர் பின்புலம் கட்டாயம் வாசகருக்கு ஒரு கூடுதல் தேர்வை அளிக்கும் என்பது என் எண்ணம். உதாரணமாக, அமெரிக்காவை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர் அதே வசிப்பிடம் கொண்டவர்களின் வலைப்பதிவைப் படிக்க நாட்டம் கொள்ளளாம். அதே போல இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவர், அதே பிறப்பிடம் கொண்டவர்களின் பதிவுகளைப் படிக்க ஆர்வமாய் இருக்கலாம். ஒருவர் தன்னை இம்மாதிரி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவராக எண்ணினால், தங்கள் பிறப்பிடம்/வசிப்பிடத்தை பொதுவான 'யாதும் ஊரே' என்று சொல்லிக்கொள்ள முடியுமாறு அமைத்திருப்பதால், இது வேறு பிராந்தியவாத தர்க்கங்களைக் கிளப்பாதென்று நம்புகிறேன்:)
இந்தச் செய்தியை கீழ்க்கண்ட வலைப்பதிவிலும் இடுகிறேன். இது சம்பந்தமான உரையாடல்களைப் பொதுவில் வைக்கவும், கோர்வையாக வாசிக்கவும் வசதியாக, அந்த வலைப்பதிவிலேயே மேலும் உங்கள் மறுமொழிகளை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் சிக்கல் இருப்பவர்கள் யா¥ குழுமத்திற்கே பதில் எழுதலாம்.
http://tamilblogs_db.blogspot.com
மிக்க நன்றியுடன்,
-காசி
Update:
Selva,
Thanks. Please see this bloglines screen's snapshot. I thought such grouping helps a simple view, and less need to scroll all the down to see which blog has been updated now. But I don't follow any logic in grouping. Just put every 10 in a group. Please share your views on this.